News March 26, 2025
விழுப்புரம் ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பேருந்துகளை சர்வீஸ் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்ற, இறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் உத்தரவிட்டார்.
Similar News
News March 29, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 29, 2025
திருக்கோவிலூர்: 130 கோடியில் தடுப்பணை புதுப்பிப்பு

விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட திருக்கோவிலூர் தடுப்பணை மறுசீரமைப்புக்கு தமிழக அரசு 130 கோடி ஒதுக்கி உள்ளது. அதனை அடுத்து இன்று மார்ச் 29 தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள தடுப்பணையை பார்வையிட்டனர். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் வட்டாட்சியர் குமரவேலன் உட்பட பலர் இருந்தனர்.
News March 29, 2025
விழுப்புரத்தில் சனி தோஷம் நீக்கும் தலம்

விழுப்புரம், மொரட்டாண்டி கிராமத்தில் 27 அடி உயர பஞ்சலோக விக்ரகமாய் கையில் வில், அம்பும் மற்ற இரு கைகளில் அபய, வரத முத்திரையோடு சனிபகவான் அருள் பாலிக்கிறார் . சனிபகவானுக்கு எதிரே 54 அடி உயர விநாயகர், 12 ராசிகளை தன்னுடலில் நிறுவப்பட்டுள்ளார். இந்த அமைப்பு சனிபகவானின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையில் உள்ளதால் இவரை வழிபட்டால் சனி தோஷம் அகலும், சனிப் பார்வை நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க