News March 30, 2024

விழுப்புரம் அருகே மின் வேலியில் சிக்கி ஒருவர் பலி

image

வானூர் அடுத்த எடைச்சேரி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (49). இவர் நேற்று (மார்ச் 29) இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே கிராமத்தில் உள்ள நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 29, 2026

விழுப்புரம்: காதல் மனைவிக்கு கொடுமை!

image

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா, டி.எடப்பாளையத்தைச் சேர்ந்தபர் முகமது ஆரிப். இவரது மனைவி ஆரிபா(28). இவர்கள் இருவரும் காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இவர், தனது பெற்றோருடன் சேர்ந்து காதல் மனைவியைக் கொடுமைப்படுத்தியதாகவும், 2ஆவது திருமணம் செய்ய முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரிபா அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News January 29, 2026

விழுப்புரத்தில் வழுக்கி விழுந்து பலி!

image

திருக்கோவிலூர் தாலுகா சொரையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகண்ணன்(70). இவர் மணம் பூண்டியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் குளியல் அறைக்கு சென்ற போது எதிர்பாராதவிதமாக வழுக்கு விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்துச் சென்றனர். ஆனால், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!