News April 17, 2024
விழுப்புரம் அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், வசந்தகிருஷ்ணாபுரம் பகுதியில் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 16) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (40) என்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து 154 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
Similar News
News September 19, 2025
விழுப்புரம்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News September 19, 2025
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 189 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், கெடார் 157 மில்லி மீட்டர், சூரப்பட்டு 112 மில்லி மீட்டர், கோலியனூர் 105 மில்லி மீட்டர், வளவனூர் 118 மில்லி மீட்டர், செஞ்சி 62 மில்லி மீட்டர், முகையூர் 106 மில்லி மீட்டர், அரசூர் 45 மி.மீ, நேமூர் 31.2 மில்லி மீட்டர், அனந்தபுரம் 50.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News September 19, 2025
விழுப்புரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

விழுப்புரம் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!