News April 22, 2024
விழுப்புரம் அருகே கார் விபத்து: 3 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பைபாஸ் சாலையில் மொளசூர் சந்திப்பு அருகே நேற்று (ஏப்ரல் 21) குறுக்கே பைக் வந்ததால் கார் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது புதுச்சேரி நோக்கிச் சென்ற, ‘எட்டியாஸ்’ கார் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.
Similar News
News July 5, 2025
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <
News July 5, 2025
இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயனடையலாம்

கட்டுமான தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் ESIC or EPFO திட்டங்களில் கீழ் வராத தொழிலாளர்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலாளர்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*
News July 5, 2025
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திண்டிவனம் சந்தைமேடு புறவழிச்சாலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான எட்டியம்மன் கோவில் முன் பகுதியில் பூட்டு போட்டு வைத்திருந்த உண்டியலை கடப்பாறையால் உடைத்து அதில் இருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் நேற்று இரவில் திருடி சென்றனர். சில நாட்களுக்கு முன் அம்மன் கழுத்தில் கிடந்த 3 கிராம் தங்க தாலி திருடு போன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.