News June 20, 2024
விழுப்புரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்தது

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, விழுப்புரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புறவழிச் சாலையில் நடந்த இந்த விபத்தில், பேருந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News July 7, 2025
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் கீழ் புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 440 வீடுகளை இன்று முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், மு.அமைச்சருமான செஞ்சி மஸ்தான் குத்துவிளக்கு ஏற்றி பயனாளிகளிடம் புதிய வீட்டினை ஒப்படைத்தார் .உடன் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் எம்பி உள்ளிட்டோர் இருந்தனர்.
News July 7, 2025
திண்டிவனம் அரசு கல்லூரியில் மயிலம் எம்எல்ஏ ஆய்வு

திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இட ஒதுக்கீட்டினை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்று இன்று (ஜூலை 7) மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறினார். உடன் கல்லூரி முதல்வர் போரசியார்கள், இருந்தனர்.
News July 7, 2025
தடை நீக்கும் பரிக்கல் நரசிம்மர்

விழுப்புரம் மாவட்டம் பரிக்கலில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது. பொதுவாக உக்கிர ரூபத்தில் காட்சியளிக்கும் நரசிம்மர், இங்கு சாந்தமாக அருள்பாலிக்கிறார். லட்சுமி தேவி மடியில் இல்லாமல், நரசிம்மர் தனியாக சாந்தமாக காட்சி தருகிறார். இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க