News September 14, 2025
விழுப்புரம்: அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை

விழுப்புரம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில், கணிதவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவிகள், கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என, கல்லூரி முதல்வர் தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
விழுப்புரம் மாணாக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகள், அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இலவச உதவி மையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன, உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்படும் மாணவர்கள், 14417 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கல்வி தொடர்பான சந்தேகம் உள்ள மாணவர்களும் இந்த எண்ணை தொடர்புக் கொள்ளலாம். அவசியம் SHARE பண்ணுங்க
News September 14, 2025
‘விஜய் பின்னால் இருப்பது கொள்கையில்லா கூட்டம்’

தேர்தலில் அளித்த 90% வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது. ஆனால், சிலர் அரசியலுக்காக, திமுக ஆட்சியை குறை கூறுகின்றனர் என, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன். கௌதம சிகாமணி, விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், “கூட்டம் கூடுவதால் தலைவனாக முடியாது. கொள்கையில்லா கூட்டம் தான், விஜய் பின்னால் கூடுகின்ற கூட்டம்” என்றும் அவர் கூறினார்.
News September 14, 2025
விழுப்புரம்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

▶️தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சியில் வேலை – tnrd.tn.gov.in ▶️ இந்திய உளவுத் துறையில் Intelligence Bureau வேலை – https://www.mha.gov.in/ ▶️எஸ்பிஐ வங்கி – https://sbi.co.in/ ▶️ இந்தியன் ஆயில் ஜூனியர் ஆபீசர் வேலை – https://iocl.com/ ▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officer – www.iob.in/Careers ▶️கனரா வங்கியில் வேலை – https://www.canmoney.in/careers ▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!