News December 13, 2025
விழுப்புரம்: அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

கள்ளக்குறிச்சியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் 16 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. அப்போது, எதிர்பாராத விதமாக விழுப்புரம், வடபொன்பரப்பி அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 16 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Similar News
News December 13, 2025
விழுப்புரம்: பண்ணை அமைக்க விருப்பமா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News December 13, 2025
விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

விழுப்புரம் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
விழுப்புரம்: ஆட்டோ கவிழ்ந்து வியாபாரி உயிரிழப்பு!

விழுப்புரம், திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் லூர்து பிரபாகர்(55). இவர், ஆட்டோ மூலம் வளையல் வியாபாரம் செய்து வருபவர். இந்நிலையில் லூர்து பிரபாகர் நேற்று முன்தினம் இரவு, ராவணாபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதி, ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லூர்து பிரபாகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


