News September 6, 2025

விழுப்புரம்: அரசு அதிகார மையத்தில் வேலை!

image

விழுப்புரம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு துறையில் பட்டம், 3 ஆண்டு அனுபவம் அவசியம். மாத ஊதியம் ரூ.20,000. விண்ணப்பங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அல்லது இணையதளத்தில் கிடைக்கும். கடைசி தேதி 22.9.2025 மாலை 5.45 மணி. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 19, 2025

விழுப்புரம்:கதவை உடைத்து நகை திருட்டு!

image

வளவனூர் அடுத்த பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி ஊருக்கு செல்வது வழக்கம் கடந்த நான்காம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். நேற்று (நவ.18) வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது தெரியவந்தது.தொடர்ந்து வளவனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 19, 2025

இரவு நேர ரோந்துப் பணி: போலீசாரின் விவர செயல்பாடு!

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (நவ.18) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்..

News November 18, 2025

விழுப்புரம்: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் & உங்களின் தகவல்களை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்பட்டு, பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 5 லட்சம் மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

error: Content is protected !!