News January 31, 2026

விழுப்புரம்: அடுத்தடுத்த அரங்கேறிய சம்பவங்கள்

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. ஜூஸ் கடை உரிமையாளர் சக்கரபாணி வீட்டில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 3.5 பவுன் நகை மற்றும் பணத்தைத் திருடினர். அதேபோல், தனியார் பள்ளி ஆசிரியை அபர்ணா வீட்டில் 2.5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரே நாளில் நடந்த இந்தத் துணிகரத் திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 9, 2026

திண்டிவனம் அருகே பரிதாப பலி!

image

விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு கவுசல்யா(33) என்ற மனைவியும், 11 வயதில் ஓர் மகனும் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த குப்பையை கொட்டுவதற்கு, கவுசல்யா வெளியே வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

News February 9, 2026

விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!