News December 29, 2025

விழுப்புரம்:வாகனத்தில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

image

வந்தவாசி வட்டம், வெண்மந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ரா.மணிகண்டன் (22). இவர், சனிக்கிழமை இரவு திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூர் காவல் சரகத்துக்குள்பட்ட ஆண்டியார்பாளையம் அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

Similar News

News December 29, 2025

விழுப்புரம்: இனி வீட்டு வரி செலுத்துவது ரொம்ப ஈஸி!

image

விழுப்புரம் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு <>புதிய இணையதளம் <<>>ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News December 29, 2025

விழுப்புரம்:இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க<> -1 <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

விழுப்புரம்:மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (டிச.29) பெற்றுக்கொண்டார்.

error: Content is protected !!