News December 28, 2025
விழுப்புரம்:ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும்<
Similar News
News December 29, 2025
விழுப்புரம்: நாளை இந்த பகுதிகளில் மின்தடை!

அரசூர், காரணைபெரிச்சானூர் துணை மின் நிலையத்தில் நாளை(டிச.30) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசூர், சேமங்கலம், பேரங்கியூர், தென்மங்கலம், ஆலங்குப்பம், குமாரபாளையம், இருவேல்பட்டு,கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், அரும்பட்டு போன்ற பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 29, 2025
விழுப்புரம்:தாய் சொன்ன வார்த்தையால் மகள் விபரீதம்!

விக்கிரவாண்டி அருகே உள்ள கீழக்கொண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், இவரது மகள் சுபாஸ்ரீ (17) சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.தற்போது, அரையாண்டு விடுமுறை என்பதால் அவரது தாய் சாந்தி வீட்டு வேலை செய் என்று கூறியதால், மனமுடைந்த மாணவி சுபாஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 29, 2025
விழுப்புரம்:வாகனத்தில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

வந்தவாசி வட்டம், வெண்மந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ரா.மணிகண்டன் (22). இவர், சனிக்கிழமை இரவு திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூர் காவல் சரகத்துக்குள்பட்ட ஆண்டியார்பாளையம் அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை.


