News December 29, 2025

விழுப்புரம்:இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க<> -1 <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 30, 2025

விழுப்புரம்: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

image

விழுப்புரம் மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட)
2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்
3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு
4) இலவச ஆம்புலன்ஸ் வசதி
5) இலவச தங்குமிடம்.
இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 30, 2025

விழுப்புரம்: பேரூராட்சியை திணறடிக்கும் திருடர்கள்!

image

விழுப்புரம்: அரகண்டநல்லூர் பேரூராட்சியில் குடிநீர் மோட்டாருக்கு செல்லும் ரூ.1.5 லட்சம் தாமிர கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் குடிநீரின்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தொடர்ந்து 8 முறை திருடிச் சென்றுள்ளதாக, பேரூராட்சி நிர்வாகம் போலீசில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் திருட்டு சம்பவம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News December 30, 2025

விழுப்புரத்தில் மின்தடை.. இதில் உங்க ஏரியா இருக்கா?

image

விழுப்புரம் மாவட்டத்தில், அரசூர் மற்றும் காரணைபெரிச்சானூர் துணை மின் நிலையங்களில் இன்று (டிச.30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமாரமங்கலம், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர். ஆயந்தூர், ஆலம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!