News December 16, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (டிச.16) இன்று இரவு 11 மணி முதல் (டிச.17) காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
Similar News
News December 19, 2025
விழுப்புரம்: மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்,வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ,விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இன்று (டிச.19) துவக்கி வைத்தனர்.
News December 19, 2025
அன்னியூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அரசு கலைக்கல்லூரி கட்டப்படவுள்ள இடத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் இன்று (டிச.19) நேரில் ஆய்வு செய்தார். தற்போது தற்காலிகமாக கல்லூரி அன்னியூர் அரசு பள்ளிக்கட்டித்தில் இயங்கி வருகின்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெளதமசிகாமணி உடனிருந்தனர்.
News December 19, 2025
JUST IN: விழுப்புரத்தில் 1.82 லட்சம் பேர் நீக்கம்

இன்று (டிச.19) விழுப்புரம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வரைவு வாக்காளர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் 1,82,865 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.


