News January 26, 2026

விழுப்புரத்தில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

image

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 26, 2026

விழுப்புரம்: B.E/ B.Tech/ M.Sc/ MBA முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு!

image

மத்திய அரசு வங்கியான UCO (யூகோ) வங்கியில் காலியாக உள்ள 173 Generalist & Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E/B.Tech/M.Sc/MBA/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து, வரும் பிப்ரவரி.02 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஷேர்!

News January 26, 2026

வீர செயல் புரிந்த காவல் துறை அலுவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்

image

விழுப்புரம் நகராட்சி, கீழ்ப்பெரும்பாக்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர், வீர செயல் புரிந்த காவல் துறை அலுவலர்களுக்கு பதக்கங்களை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.26) வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், உட்பட பலர் உள்ளனர்.

News January 26, 2026

விழுப்புரத்தில் 77வது குடியரசு திருவிழா

image

நாட்டின் 77வது குடியரசு திருவிழாவினை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு ஆணையத்தில் உள்ள மைதானத்தில் மூவர்ண கொடியை ஏற்றி விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வைத்தார்.
இந்த நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிபதி மணிமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் க. பொன்முடி, டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி அருளரசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!