News September 30, 2024

விழுப்புரத்தில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

விழுப்புரம் சத்தியமங்கலம் பகுதியில் பன்னீர்செல்வம் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரும் ஆக.7ஆம் தேதி வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஆட்சியர் பழனி உத்தரவின்படி, எஸ்.பி.தீபக் சிவாஜ் பரிந்துரையின் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பன்னீர்செல்வத்தை கடலூர் மத்திய சிறையிலும், சீனிவாசனை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர்.

Similar News

News August 31, 2025

விழுப்புரத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு: 3,000 பேர் எழுதுகின்றனர்.

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3,000 பேர் இன்று(ஆக.31) டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.பி மேல்நிலைப்பள்ளி மற்றும் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். தேர்வெழுத உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News August 30, 2025

விழுப்புரம் : ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை… சூப்பர் வாய்ப்பு!

image

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு சூப்பர்வைசர் பணிக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.17-க்குள் <>இந்த<<>> லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News August 30, 2025

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணிநீக்கம்

image

விழுப்புரம் நகர பகுதியில் இயங்கி வரும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆங்கில பாட ஆசிரியர் பால் வின்சென்ட் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் பால் வின்சென்ட் இன்று (சனிக்கிழமை) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!