News August 30, 2025

விழுப்புரத்தில் 1,000 ‘உழவர் நல சேவை மையங்கள்’: அரசு மானியம்.

image

விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயப் பட்டதாரிகளின் திறமையைப் பயன்படுத்தி, உழவர்களுக்கு உதவும் வகையில், 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இம்மையங்கள் அமைக்க அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு, தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.

Similar News

News September 20, 2025

விழுப்புரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் 9 பிரதான மதகுகள் வழியாக 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

News September 20, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 20, 2025

உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று (19.09.2025) நடைபெற்றது. உடன் வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!