News November 7, 2025
விழுப்புரத்தில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

விழுப்புரம் மாவட்ட மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
Similar News
News January 30, 2026
விழுப்புரத்தில் விளையாட்டு திருவிழா துவக்கம்

விளையாட்டு திருவிழா போட்டிகள் விழுப்புரத்தில் விளையாட்டு திருவிழா முன்னிட்டு நாளை 31ம் தேதி ஆண்களுக்கான வாலிபால், கபடி, கிரிக்கெட் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு கயிறு இழுத்தல், கேரம் போட்டிகள் நடக்கிறது. 1ம் தேதி பெண்களுக்கு வாலிபால், கபடி, எறிபந்து மற்றும் ஆண்கள், பெண்களுக்கு தடகளம் மற்றும் மாவட்ட அளவில் ஆண்கள், பெண் களுக்கு ஓவியம், கோலப் போட்டிகள் தொடங்கும் என ஆட்சியர் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
விழுப்புரம்: புதுமாப்பிள்ளை பரிதாப பலி!

திருவெண்ணெய்நல்லூர் அருகே உறவினர் திருமணத்திற்காக வந்த லோகநாதன் என்பவர், மோட்டார் சைக்கிள் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் நிறுவன ஊழியரான இவருக்குத் திருமணம் முடிந்து 2 மாதங்களே ஆன நிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
செஞ்சி: ஏரியில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்!

செஞ்சியை அடுத்த செம்மேடு ஏரியில், சோழந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (75) என்பவர் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 27-ம் தேதி வீட்டிலிருந்து மாயமான அவர், தற்போது ஏரியில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மகன் ரமேஷ் அளித்த புகாரின் பேரில், இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்கின்றனர.


