News August 20, 2024
விழுப்புரத்தில் ரயில் சேவைகள் ரத்து 2/3

காக்கிநாடா – புதுச்சேரி விரைவு ரயில் செப். 1ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். செப்.2ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடாவுக்கு பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும். காச்சிகூடா – புதுச்சேரி விரைவு ரயில் செப்.1ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். செப்.2ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்து காச்சிகூடாவுக்கு பிற்பகல் 3.55 மணிக்கு புறப்படும்.
Similar News
News August 28, 2025
கீழ் புத்துப்பட்டு பீச்சுக்கு நீலக் கொடி சான்றிதழ்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள கீழ் புத்துப்பட்டு உட்பட தமிழகத்தில் உள்ள ஆறு கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக தமிழக அரசு 24 கோடி ரூபாயை இன்று ஆகஸ்ட் 28 வியாழக்கிழமை ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இந்த கடற்கரைகளில் சுற்றுப்புற சூழல் சீர்கெடாத வண்ணம் சுத்தமாக பராமரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 28, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் 1700 விநாயகர் சிலைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சிலை அமைப்புக் குழுக்கள், பொதுமக்கள் சாா்பில் மொத்தமாக 1,700 விநாயகா் சிலைகள் சுமாா் 3 அடி முதல் 10 அடி உயரத்தில் வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிலை வைக்கப்பட்டுள்ள பதற்றமான இடங்களில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு ரோந்து வாகனங்களில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News August 28, 2025
விழுப்புரம்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539572>>தொடர்ச்சி <<>>