News January 26, 2026
விழுப்புரத்தில் மீட்கப்பட்ட ஆண் சடலம்!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது கட்டுமான ஒப்பந்ததாரர் சே.சிவக்குமார், திண்டிவனத்தில் விடுதியில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார், சிவக்குமாரின் உடலைக் கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
விக்கிரவாண்டி அருகே பரிதாப பலி!

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த வெல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜபதி(35). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் இரவு, வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலைதடுமாறி மயங்கி விழுந்தார். அவரை மீட்ட, அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 10, 2026
விழுப்புரம்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

காணை அருகே உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி(27). இவர், பி.எஸ்.சி படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நீண்ட நாட்களாக இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், மன உலைச்சலில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காணை போலீசார் வழக்கு ஒஅதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 10, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

வி.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர், புதுச்சேரி மாநிலம், திருவண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், இவர் தனது பைக்கில் சென்னை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது. நடுவே இருந்த தடுப்புச் சுவரில் எதிர்பாராத விதமாக மோதினார். இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


