News May 17, 2024

விழுப்புரத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்வு

image

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. வழிகாட்டி நிகழ்வில் மாணவர்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது.

Similar News

News December 3, 2025

விழுப்புரம்: மின்சாரம் தாக்கியதால் முதியவர் பலி!

image

விழுப்புரம் வட்டம், ராம ரெட்டிக்குளத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் மின்சார விளக்கை எரிய விட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி கரிக்கலாம் பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

News December 3, 2025

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி: ஆட்சியர் தகவல்

image

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.9,600 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

News December 3, 2025

விழுப்புரம்: தந்தை கண்டித்ததால் மாணவன் விபரீத முடிவு!

image

விழுப்புரம்: மரூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தினேஷ் குமார் (18) திண்டிவனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தினேஷ்குமார் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் ஏழுமலை, தனது மகன் தினேஷ்குமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த தினேஷ்குமார் வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரிய தச்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!