News October 13, 2025

விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று அக்.13 மக்கள் குறைதீர் கூட்டம் கூட்டத்துக்கு ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகை கோருதல், பட்டா வழங்கக் கோருதல், பட்டா பெயா் மாற்றம், கல்விக் கடன், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனா். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

Similar News

News October 13, 2025

விழுப்புரம் : ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

விழுப்புரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News October 13, 2025

விழுப்புரம் : மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம் என ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று (அக்.12) எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் அணையிலிருந்து தற்பொழுது 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால், நாளை(அக்.13) அதிகளவு நீர் திறக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ கடக்கவோ கூடாது என எச்சரித்துள்ளார்.

News October 13, 2025

போதை மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்மாக்குளம் ஏரிக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், செஞ்சியை சேர்ந்த அன்பரசன் ஆகிய இருவரை போலீசார் கைது நேற்று (அக்.12) செய்தனர். இவர்களிடமிருந்து 17 போதை மாத்திரைகள், போதை ஊசி மற்றும் இருசக்கர வாகனம் பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

error: Content is protected !!