News August 26, 2025

விழுப்புரத்தில் மக்கள் நீதிமன்றம்

image

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் தேசிய அளவில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடக்க இருக்கிறது. செப்டம்பர் 13ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், செஞ்சி, திண்டிவனம், திருவெண்ணைநல்லூர், விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலூர் நீதிமன்ற வளாகங்களில் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி கேட்டுகொண்டுள்ளார்.

Similar News

News March 29, 2026

விழுப்புரத்தில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

விழுப்புரத்தில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

விழுப்புரம்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க <>இந்த<<>> இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 29, 2026

விழுப்புரம்: மார்ச் 31-ல் டாஸ்மாக் மற்றும் இறைச்சி கடைகள் மூடல்

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்புகள் மற்றும் இறைச்சி கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் கடைகளை மூட வேண்டும்
விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!