News November 3, 2024
விழுப்புரத்தில் பேருந்து விபத்து: உயிர் தப்பிய பயணிகள்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று நேற்று அதிகாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பயணிகள் யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 17, 2025
விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு

விழுப்புரத்தில் இன்று(ஆக.17) நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று கரங்களை தட்டி ஆதரவு தெரிவித்தனர். மேலும் 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
News August 17, 2025
விழுப்புரத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் வரும் ஆக. 22ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8th,10th, 12th ITI, அல்லது டிகிரி முடித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9442208674 எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க
News August 17, 2025
விழுப்புரம் மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க…

விழுப்புரம் மக்களே மற்றவர்கள் உங்கள் செல்போனை ஹேக் செய்வதில் இருந்து பாதுகாக்க சில டிப்ஸ் பற்றி காண்போம். ▶️ ஆப் ஸ்டோரிலிருந்து மட்டும் ஆப்ஸைப் பதிவிறக்கவும் ▶️பொது வைஃபையைப் பயன்படுத்த வேண்டாம் ▶️passwords-யை மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டாம் ▶️ உங்கள் ஆப்ஸைப்பை எப்போது அப்டேட்டில் வைத்திருங்கள். மேலும் புகாரளிக்க <