News July 7, 2025
விழுப்புரத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஒரத்துார் கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (28) சிந்தாமணியை சேர்ந்த மோனிஷா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முத்துவேல் குடித்துவிட்டு வருவதால் மனைவியிடையே தகராறு ஏற்படும். இதற்கிடையே நேற்று மீண்டும் முத்துவேல் குடித்துவிட்டு வந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 7, 2025
விழுப்புரத்தில் மாணவர்களுக்கு 10ஆம் தேதி பேச்சுப்போட்டி

தமிழ்நாடு நாளை நினைவு கூறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி வரும் 10 ம் தேதி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பினை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News July 7, 2025
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் (1/2)

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News July 7, 2025
ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் (2/2)

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று,ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் <