News August 15, 2025
விழுப்புரத்தில் புதிய தாழ்தளப் பேருந்துகள் விரைவில் இயக்கம்

விழுப்புரம் கோட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 புதிய தாழ்தளப் பேருந்துகளில் 10 பேருந்துகளுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றில் 3 பேருந்துகள் விழுப்புரம் தலைமை அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளுக்கு வழித்தட அனுமதி கிடைத்தவுடன், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 9, 2026
விழுப்புரத்தில் 250 கோழிகள் இலவசம்!

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
மரக்காணம் அருகே தீ குளித்து தற்கொலை!

விழுப்புரம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி சரண்யா பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீ குளித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 9, 2026
விழுப்புரம்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <


