News April 2, 2024

விழுப்புரத்தில் பரவும் வைரல் செய்தி

image

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு வெளியாகும். இதற்கிடையில் 19ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு நாள் அது தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பிறந்தநாள் என்றும், வாக்கு எண்ணப்படும் நாளான ஜூன் 4ஆம் தேதி அனில் அம்பானியின் பிறந்தநாள் என்றும் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News February 17, 2026

விழுப்புரம்:ஆட்சியர் தலைமையில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம்

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (பிப்.17) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சாலை பாதுகாப்பு பற்றிய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

News February 17, 2026

விழுப்புரம் : வினாடி வினா மற்றும் திருக்குறள் விவாத மேடை

image

கன்னியாகுமரி திருக்குறள் மாணவர் மாநாட்டில் விழுப்புரம் மாவட்டம் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொணடனர். மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் மாணவர்கள் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ்களை விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (பிப்.17) காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

News February 17, 2026

விழுப்புரம்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!