News January 1, 2026
விழுப்புரத்தில் நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
Similar News
News January 6, 2026
திண்டிவனம்: கத்தி குத்தில் முடிந்த TV சண்டை!

திண்டிவனம் அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(29). கூலித் தொழிலாளியான இவரது தம்பி, சம்பவத்தன்று மது குடித்து வீட்டுக்கு வந்தார். அப்போது டி.வியை அதிக சத்தத்தில் வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனை பாண்டியன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக், பாண்டியனை கத்தியால் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்தனர்.
News January 6, 2026
விழுப்புரம்: மகன் வாழ்வில் ஏற்பட்ட விரிசல் – தந்தை தற்கொலை!

விக்கிரவாண்டி அடுத்த வெங்கதூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜாக்கண்ணு (61) இவரது மகன் பாஸ்கரனுக்கும் மருமகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மருமகள் பிரிந்து சென்றார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த ராஜாக்கண்ணு, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்துப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, கெடார் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
விழுப்புரம்: ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது!

விழுப்புரம் அருகே கொண்டங்கி கிராமத்தில் வாத்துக்களுக்கு தீவனமாக பயன்படுத்த ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சுபாஷ் (27) என்ற இளைஞரை குற்றப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், இது தொடர்பாக, பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


