News August 8, 2025
விழுப்புரத்தில் நாளை ரத்ததான முகாம்

நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆச்சார்யா பள்ளி, சரோஜினி கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் மற்றும் மனிதம் காப்போம் அறக்கட்டளை இணைந்து சாலாமேட்டில் உள்ள ஆச்சார்யா சிக்ஷ மந்திர் பள்ளியில் நாளை காலை 9 முதல் மதியம் 1 மணிவரை ரத்ததான முகாமை நடத்த உள்ளது. இந்த ரத்ததான முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
மாநில கல்விக் கொள்கையில் தவறான முடிவு – விழுப்புரம் எம்பி

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று இன்று ஆகஸ்ட் 8 வெள்ளிக்கிழமை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இது தவறான முடிவு என்றும் மறுபரிசீலினை செய்ய வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் வி.சி.க எம்.பி ரவிக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
News August 8, 2025
விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு முதல் கிழக்கு பாண்டி சாலை பகுதியில் மாதாகோவில் பஸ் நிறுத்தம் வரையில், தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.
News August 8, 2025
திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரெயில்

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலத்திற்கு செல்வது வழக்கம். ஆகஸ்ட் மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் அதிக போக்குவரத்தை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.