News March 29, 2025
விழுப்புரத்தில் சனி தோஷம் நீக்கும் தலம்

விழுப்புரம், மொரட்டாண்டி கிராமத்தில் 27 அடி உயர பஞ்சலோக விக்ரகமாய் கையில் வில், அம்பும் மற்ற இரு கைகளில் அபய, வரத முத்திரையோடு சனிபகவான் அருள் பாலிக்கிறார் . சனிபகவானுக்கு எதிரே 54 அடி உயர விநாயகர், 12 ராசிகளை தன்னுடலில் நிறுவப்பட்டுள்ளார். இந்த அமைப்பு சனிபகவானின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையில் உள்ளதால் இவரை வழிபட்டால் சனி தோஷம் அகலும், சனிப் பார்வை நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
Similar News
News April 1, 2025
துரத்தி சென்று கண்ணாடியை உடைத்து அட்டூழியம்

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி தனது குடும்பத்துடன் நேற்று (மார்.31) காரில் திண்டுக்கல் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, விழுப்புரம் புறவழிச்சாலையில் பைக் மீது கார் லேசாக உரசியது. இதனால் ஆத்திரமடைந்த மூவர் காரை துரத்தி சென்று கார் கண்னாடியை அடித்து உடைத்தனர். 30 கி.மீ., வரை காரை துரத்தி சென்று மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் ராஜேஷ் (24). ராஜா(25) வினோத் (22) மூவரை போலீசார் கைது செய்தனர்.
News March 31, 2025
தீராத குடும்ப பிரச்சனைகள் தீர்க்கும் கோவில்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால், கணவன் மனைவி பிரச்சனை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. நீங்களும் இங்கு சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க.
News March 31, 2025
விழுப்புரம் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு

தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இரவு முதல் கட்டண உயர்வு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை சொந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மற்றும் நங்கிளிகொண்டான் சுங்கச்சாவடி மற்றும் பல சுங்கச்சாவடிகள் அடங்கும் என்பதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் செய்யும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.