News December 31, 2025

விழுப்புரத்தில் கிலோ கணக்கில் குட்கா பறிமுதல்.. 3 பேர் கைது

image

விழுப்புரம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்தனர் காரில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனோகர் சிங் அகமது அலி பிரவீன் குமார் ஆகிய மூன்று பேரும் கைது செய்து அவர்கள் கடத்திய 405 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News

News December 31, 2025

விழுப்புரம் வாக்காளர்கள் கவனத்திற்கு..

image

விழுப்புரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

விழுப்புரம்: டிகிரி போதும்… அரசு வங்கியில் வேலை

image

▶️ BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️ இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
▶️ மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
▶️ விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். *டிகிரி முடித்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News December 31, 2025

விழுப்புரத்தில் 1300 போலீசார் பணியில் ஈடுபடவுள்ளனர்

image

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,300 போலீஸாா் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 63 இடங்களில் போலீஸாா் (டிச.31) வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனா். பொது இடங்களில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை. இதை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

error: Content is protected !!