News August 7, 2024
விழுப்புரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை விக்கிரவண்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று மழை பெய்யுமா?
Similar News
News August 27, 2025
விழுப்புரம்: உங்கள் நிலத்தை கண்டுபுடிக்க இதோ வழி

விழுப்புரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க<
News August 27, 2025
விழுப்புரம்: வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை ஆகஸ்ட் 28 காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்பு நடக்க இருக்கிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 27, 2025
விழுப்புரம்: விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு பதவிகளுக்கு 42வயதிற்கு உட்பட்ட +2 தேர்ச்சி முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் https://villupuram.nic.in பதிவிறக்கம் செய்து 15 தினங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.