News August 19, 2025

விழுப்புரத்தில் இன்று எங்கெங்கு மின்தடை(1/2)

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.19) காரணைபெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்ட நல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூர், காடகனூர், வி.சித்தாமூர், சி.மெய்யூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். <<17449011>>தொடர்ச்சி<<>>

Similar News

News August 19, 2025

பௌத்தர்கள் புனித யாத்திரைக்கு மானியம் பெற விண்ணப்பம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நாக்பூரில் நடைபெற உள்ள தம்ம சக்கர பரிவர்த்தனை திருவிழாவிற்கு சென்று திரும்பும் 150 பௌத்தர்களுக்கு, தமிழக அரசு தலா ரூ.5000 வரை மானியம் வழங்குகிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணம் இன்றி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். வருகின்ற நவ.30 விண்ணப்பிக்க கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஆக.18) மாவட்ட சுகாதாரத்துறை மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனை கட்டிடங்களின் தரம், உபகரணங்கள், தளவாடப் பொருட்கள் மற்றும் தேவையான மருந்து இருப்புகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. உடன் சுகாதார இயக்குனர் ரமேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

News August 19, 2025

அத்தியூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றகை போராட்டம்

image

அத்தியூர் கிராம மக்கள், நேற்று(ஆக.18) காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர். மனுவில், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் தனி சுடுகாடும், பிற சமுகத்தினருக்கு ஒரு பொது சுடுகாடும் உள்ளது. பொது சுடுகாடு பகுதியில், பழங்குடி இருளர் மக்களுக்காக, அரசு சார்பில் இலவச மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுடுகாட்டில் பட்டா வழங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

error: Content is protected !!