News May 6, 2024

விழுப்புரத்தில் அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட தேர்ச்சி அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று வெளியிட்டார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

Similar News

News February 16, 2026

விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

விழுப்புரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். *இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க*

News February 16, 2026

விழுப்புரத்தில் குடிநீரின்றி பறிதவிக்கும் மக்கள்!

image

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பூசாரிப்பாளையம் கிராமத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்பட்ட மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். ஆகையால், சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இதனை சீரமைத்து, குடி நீர் விநியோகம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News February 16, 2026

விழுப்புரம் அருகே அதிரடி கைது!

image

காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் தலைமையிலான போலீசார் கருங்காலிப்பட்டு, அழகம்மாகோவில் குளக்கரை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக 2 பைக்கில் சென்ற, 3 பேரை மறித்து விசாரித்தனர். இந்த சோதனையில், அவர்களிடம் 21 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, மாம்பழப்பட்டைச் சேர்ந்த கணேசன்(37), பூங்காவனம்(42), விநாயகம்(51) ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!