News January 23, 2026
விழுப்புரத்தில் அதிகரிக்கும் சிக்குன்குனியா!

விழுப்புரத்தில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. எலிசா பரிசோதனைகளுக்கு தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்கவும், மருத்துவமனைகளில் டெங்கு, சிக்கன்குனியாக்கென பிரத்யேக வார்டுகளை அமைக்கவும், நடமாடும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Similar News
News January 24, 2026
சாலை பாதுகாப்பு குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, போக்குவரத்துத்துறை, சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.23) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
News January 24, 2026
வாக்காளர் தின தின விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 16-வது தேசிய வாக்காளர் தினத்தினை (ஜன.25) முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த வாக்காளர் தின தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.23) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
News January 24, 2026
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறுதிமொழி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தினகரன், இளமுருகன் ஆகியோர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்றனர். மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நேர்மையுடன் செயல்படுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.


