News March 19, 2024

விழுப்புரத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினர் வருகை

image

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வகையில், டிஎஸ்பி ரவாத் தலைமையில், காவல் ஆய்வாளா் ஜெகதீஷ் மற்றும் 89 போலீஸாா் கொண்ட மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை குழுவினா் நேற்று (மார்ச் 18) விழுப்புரத்துக்கு வந்தனா். இவா்கள், காகுப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 9, 2025

விழுப்புரத்தில் இலவச தையல் பயிற்சி!

image

விழுப்புரம் மாவட்டத்தில் சுய தொழில் கனவு கொண்ட பெண்களா..? உங்களுக்கான் ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு அரசு சார்பாக பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். நல்ல வாய்ப்பு, உடனே விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 9, 2025

விழுப்புரம்: மாணவியிடம் போலீஸ் பாலியல் சீண்டல்

image

திண்டிவனம் – மரக்காணம் சாலையில் மாணவி தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் தென்ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோ, மாணவியை நிறுத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரில் இளங்கோவை ஆரோவில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 9, 2025

விழுப்புரம்: ரூ.4.12 கோடி சுருட்டிய அதிகாரிகள்.. போராட்டம் அறிவிப்பு

image

செஞ்சி வட்டம் சந்தியங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், 2016ஆம் ஆண்டு விவசாயிகளை ஏமாற்றி கூட்டுறவு அதிகாரிகள் ரூ.4.12 கோடியை சுருட்டி உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்கவும், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், வரும் நவ.20ஆம் தேதி வயிற்றில் கருப்பு துணிகட்டி காத்திருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!