News May 25, 2024

விளையாட்டு உபகரணம் வழங்கிய அமைச்சர்

image

தூத்துக்குடியை சேர்ந்த லயன்ஸ் ஸ்டார் விளையாட்டு கிளப் குழுவினர் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் தேவைப்படுவதாக கோரிக்கை வைத்திருந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீதா ஜீவன் நேற்று விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கான உபகரணங்களை வழங்கினார்.

Similar News

News February 10, 2026

தூத்துக்குடி: பைக் விபத்து; சம்பவ இடத்திலேயே பலி..!

image

தூத்துக்குடி ஸ்பிக் நகர் அருகே பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முத்தையாபுரம் எழில் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் அஜித்குமார்(22) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்றொரு பைக்கில் வந்த அய்யன் கோவில் தெருவை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் தனபால் என்பவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 10, 2026

தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் பட்டியல் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு ரோந்து காவல் அதிகாரியாக விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள அதிகாரிகள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அவசர தேவைக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்படுகிறது.

News February 9, 2026

BREAKING: திருச்செந்தூர் முருகன் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா வரும் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சிவப்பு சாத்தி 27ம் தேதியும், பச்சை சாத்தி 28ம் தேதியும், திருத்தேர் மார்ச் 2ம் தேதியும், தெப்ப தேர் மார்ச் 3ம் தேதியும் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!