News April 17, 2025

விளையாட்டுப் பிரிவில் கொடைக்கால பயிற்சி முகாம்

image

திருவாரூர் மாவட்ட விளையாட்டுப்பிரிவால், 2025 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள்,மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோருக்கு திருவாரூர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் எதிர்வரும் 25 முதல் 15.05.2025 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 17, 2025

திருவாரூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <>myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid <<>>என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 17, 2025

திருவாரூரில் கல்வி கடன் முகாம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சிஸ் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 383 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4 கோடியே 99 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான வங்கி வரைவோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

திருவாரூர்: பெரியார் சிலைக்கு மரியாதை செய்த எம்.எல்.ஏ

image

தந்தை பெரியார் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.மாரிமுத்து எம்எல்ஏ பெரியரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார், இந்நிகழ்வில் முத்துப்பேட்டை சிபிஐ ஒன்றிய செயலாளர் எம்.உமேஷ்பாபு உடன் இருந்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!