News November 25, 2025

விளையாட்டில் வீறுநடைபோடும் இந்திய சிங்கப்பெண்கள்..

image

நவம்பர் மாதத்தில், இந்திய வீராங்கனைகள் வெற்றிக் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று வருவது, நாட்டின் விளையாட்டு வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நவ.2-ல் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி தட்டியது. தொடர்ந்து, நவ.23-ல் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி கெத்தாக தனதாக்கியது. அதற்கு அடுத்த நாளே (நவ.24) கபடி மகளிர் உலகக்கோப்பையையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

Similar News

News November 25, 2025

உதயநிதி ஒரு இந்து விரோத சக்தி: H ராஜா

image

திராவிட மாடல் அரசு என்றாலே திருட்டு, இருட்டு, புரட்டு, உருட்டு என்றே அர்த்தம் என H ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களில் திமுக அரசு சொல்வது அனைத்தும் முழு பொய் என்று சாடிய அவர், திமுகவை தான் நம்பவே மாட்டேன் என்றும் கூறினார். SIR பணிகளால் எந்த ஊழியரும் மன உளைச்சலில் இறக்கவில்லை என்றார். மேலும், உதயநிதி ஒரு இந்து விரோத சக்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.

News November 25, 2025

கனமழை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

நாளை புயல் உருவாகவுள்ள நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு விடுமுறை இல்லாவிடில், குடை, ரெயின் கோட் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள் மாணவர்களே..

News November 25, 2025

நள்ளிரவில் பெண்கள் தனியாக செல்ல வேண்டாம்: பிரேமலதா

image

யாரையும் நம்பாமல், நள்ளிரவில் தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று பெண்களுக்கு பிரேமலதா அறிவுறுத்தியுள்ளார். அரசு, பெற்றோர், போலீஸ் என எல்லாரும் 24 மணிநேரமும் நம்மை பாதுகாக்க மாட்டார்கள் என்றும் கூறிய அவர், நாம் தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அங்கு பரப்புரை செய்கையில் இவ்வாறு பிரேமலதா பேசினார்.

error: Content is protected !!