News August 26, 2024
விளவங்கோடு முன்னாள் எம்.எல்.ஏ பரபரப்பு தகவல்

விளவங்கோடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி இன்று பேட்டியளித்துள்ளார். அதில், “இந்த தேர்தலில் எனக்கு எம்.பி சீட் கிடைத்தது. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் பிடிவாதமாக இருந்ததால் அவருக்காக விட்டுக்கொடுத்தேன். மேலும், காங்கிரஸில் நடிகர் விஜய் பொறுப்பு கேட்டார். அதை மறுத்த ராகுல் காந்தி விஜயை தனி கட்சி தொடங்க கூறனார். அதன்படியே விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்” என தெரிவித்தார்.
Similar News
News March 4, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு ஏதேனும் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம்.
News March 3, 2026
குமரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News March 3, 2026
குமரி: பாஜக கவுன்சிலர் உட்பட 12 பேர் மீது வழக்கு

நாகர்கோவில் ஒழுகினசேரி பாலம் பகுதியில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை தொங்கவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஐரின் சேகர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் மாநகர பாஜக கவுன்சிலர் சுனில் மற்றும் ராஜா உட்பட 12 பேர் மீது நாகர்கோவில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


