News January 16, 2026
விளம்பர கூட்டணியில் நடிகர் அஜித்குமார்

நீண்ட காலமாக விளம்பரத் துறையில் இருந்து விலகியிருந்த அஜித்குமார், தற்போது ‘Campa Energy’ என்ற விளம்பரத்தில் நடித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதற்காக Reliance Consumer Products (RCPL) நிறுவனத்துடன் AK Racing குழு ஒப்பந்தத்தில் (கூட்டணி) கையெழுத்திட்டுள்ளது. இதன்படி ‘Campa Energy’ பிராண்ட், AK Racing-ன் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News January 27, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 27, தை 13 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: நவமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News January 27, 2026
கலப்பட மஞ்சள் தூளை கண்டுபிடிப்பது ஈஷி!

கலப்பட புகார் காரணமாக, வீடுகளில் மஞ்சள் தூளை பயன்படுத்தும் முன் பரிசோதனை செய்யும்படி TN அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அதன் தரத்தை உறுதி செய்ய, ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிது நேரத்தில் மஞ்சள் தூள் அனைத்தும் டம்ளரின் கீழே தங்கிவிட்டால் அது சுத்தமான மஞ்சள் தூள். மிதந்தாலோ, அடர் மஞ்சள் நிறமாக மாறினாலோ அது கலப்பட தூள். உடனே டிரை பன்ணி பாருங்க…
News January 27, 2026
அப்போ டார்ச் லைட்டை OFF பண்ண வேண்டியது தானா?

டார்ச் சின்னம் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில், குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட கமலின் மநீம விரும்புகிறது. இதுகுறித்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்திருந்தது. ஆனால் ஒற்றை இலக்க தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும், உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தி வருகிறது. இதனால் டார்ச் லைட்டை ON செய்யவே முடியாதா என மநீம தரப்பு தவித்து வருகிறது.


