News February 27, 2026
விலை ₹45,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? பிப்ரவரி மாத சிறப்பு சலுகைகள் முடிவடைய உள்ளன. <<19182957>>டாடா<<>>, <<19187177>>மாருதி<<>>, <<19166383>>ஹுண்டாய்<<>>, <<19101460>>ஹோண்டா<<>>, <<19114006>>ரெனால்ட்<<>> உள்ளிட்ட கார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ₹45,000 முதல் அதிகபட்சமாக ₹73,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப் பக்கம் ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். SHARE IT.
Similar News
News March 1, 2026
போர் பதற்றம்.. தமிழக அரசின் உதவி எண்கள் அறிவிப்பு

வளைகுடா நாடுகளின் வசிக்கும் தமிழரின் நலன் காக்க, அயலகத் தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். <<19264571>>போர் காரணமாக<<>> இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை தமிழர்கள் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், உதவி எண்களை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவிற்குள்–1800 309 3793, வெளிநாடு– +91 80 6900 9900, +91 80 6900 9901.
News March 1, 2026
இன்று இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை

வாழ்வா சாவா ஆட்டத்தில் இன்று இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. சூப்பர் 8 சுற்றில் SA-வுக்கு எதிராக படுதோல்வி கண்ட இந்தியா, ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கம்பேக் கொடுத்தது. இரு அணிகளையும் ஒப்பிட்டால் பந்துவீச்சில் இந்தியா பலமாக திகழ்கிறது. எனினும், வெஸ்ட் இண்டீஸை குறைத்து மதிப்பிட முடியாது. அரையிறுதி வாய்ப்புக்கு இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
News March 1, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 1, மாசி 17 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


