News December 19, 2025
விலை ₹3,000 குறைந்தது.. பொங்கல் பண்டிகை மகிழ்ச்சி

கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தை தொட்டு வரும் வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. சில்லறை விலையில் 1 கிராம் ₹221-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,21,.000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை குறைந்துள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு சீர் பொருள்கள் வாங்குவோர் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் வெள்ளி விலை குறைந்து வருவதால் வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது.
Similar News
News December 19, 2025
BREAKING: லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கம்

SIR பணிகளுக்கு பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் தகவல் வெளியாகி வருகிறது. அதில், சென்னையில் மட்டும் சுமார் 14.5 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு (7 லட்சம் பேர்), கோவை (6.5 லட்சம் பேர்) உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1 கோடி பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
News December 19, 2025
லிங்குசாமியை கைது செய்ய உத்தரவு

லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம், 2016-ல் தனியார் நிறுவனத்திடம் இருந்து பெற்ற ₹35 லட்சம் கடனை திருப்பி செலுத்தாததால் பணமோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் லிங்குசாமி & தயாரிப்பு நிறுவன இயக்குநர் சுபாஷ் சந்திர போஸை குற்றவாளி என அறிவித்த அல்லிக்குளம் கோர்ட், இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. வட்டியுடன் ₹48.68 லட்சம் கடனை திருப்பி செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
News December 19, 2025
PM மோடி கார்கள் எவ்வளவு கோடி தெரியுமா?

PM மோடி பயன்படுத்தும் வாகனங்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்கின்றன. இந்த கார்கள் அனைத்தும் ஏவுகணை தாக்குதலை தாங்கும் தன்மை, டயர்கள் பஞ்சர் ஆனாலும் ஓடும் தன்மை, மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவை. அந்த வகையில், என்னென்ன கார்கள் உள்ளன, அவற்றின் மதிப்பு என்னவென்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


