News December 21, 2025
விலை ₹16,000 உயர்ந்தது.. மிகப்பெரிய மாற்றம்

உலக சந்தையில் வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் இந்திய சந்தையில் 2025 இறுதிக்குள் கிலோ ₹2.50 லட்சத்தை எட்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாரத்தில் மட்டும் பார் வெள்ளி கிலோவுக்கு ₹16,000 உயர்ந்துள்ளது. இது கடந்த 14-ம் தேதி ₹2.10 லட்சமாக இருந்தது. இன்று(டிச.21) 1 கிலோ வெள்ளி ₹2,26,000-க்கும், சில்லறை விலையில் 1 கிராம் ₹226-க்கும் விற்பனையாகிறது.
Similar News
News December 28, 2025
ரியல் லைஃப் நாயகன் மறைந்தார்.. நடிகர்கள் அஞ்சலி

கேப்டன் <<18692049>>விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு<<>> தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், FEPSI தலைவர் RK செல்வமணி, இயக்குநர்கள் பேரரசு, RV உதயகுமார், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், பேசிய நடிகை கஸ்தூரி கேப்டன் தங்களுக்கு ரியல் லைஃப் நாயகன் எனப் புகழாரம் சூட்டினார். கேப்டன் குறித்து உங்க கருத்து?
News December 28, 2025
BREAKING: நல்லகண்ணு மீண்டும் ICU-வில் அனுமதி

CPI மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்புதான் 101 வயதை அவர் எட்டினார். ஏற்கனவே நுரையீரல் தொற்று ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் அவருக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 28, 2025
பெரிய PDF-களை படிக்க கஷ்டமா இருக்கா? இதோ Solution

மாணவர்களே, பெரிய பெரிய PDF-களை படிக்க நேரமே இல்லையா? உங்களுக்காகவே ‘ChatPDF’ என்ற AI Tool இருக்கிறது. இந்த AI Tool-ல் உங்கள் PDF-ஐ அப்லோட் செய்தால் போதும். உங்களுக்கு பதில் அதுவே முழு PDF-ஐ படித்து முடித்துவிடும். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை பற்றி அதனிடம் கேள்வியாக கேளுங்கள். அது, PDF-ல் இருக்கும் பதில்களையும், அதற்கான விளக்கத்தையும் அளிக்கும். மாணவர்கள் படிப்புக்கு உதவும், SHARE.


