News January 25, 2026
விலை மளமளவென குறைந்தது.. HAPPY NEWS

நாளை ஞாயிற்றுக்கிழமை சிக்கன் சாப்பிடலாம் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வந்துள்ளது. நாமக்கல்லில் கறிக்கோழி விலை (உயிருடன்) 1 கிலோ ₹133 ஆக குறைந்துள்ளது. மேலும், இந்த வாரத்தில் மட்டும் கிலோவுக்கு சுமார் ₹20 வரை சரிந்துள்ளது. இதனால், கடந்த வாரம் இறைச்சிக் கடைகளில் சிக்கன் கிலோ ₹300 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ₹40 வரை குறைய வாய்ப்புள்ளது. நாளை யாரெல்லாம் சிக்கன் வாங்க போறீங்க?
Similar News
News February 18, 2026
ஆபாச வீடியோக்கள் உலா.. அமைச்சர் கிடுக்குப்பிடி

இணையத்தில் ‘Deep fake’, ‘AI’ மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை கட்டுப்படுத்த சமூக வலைதள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். டெல்லியில் AI உச்சி மாநாட்டில் பேசிய அவர், இதற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பார்லிமென்ட் குழு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், நவீன உலகில் எது உண்மை, எது பொய் என்பதை மக்கள் ஆராய்ந்து அறிய வேண்டும் என்றார்.
News February 18, 2026
‘இன்னும் கொஞ்சம் என’ ரீல்ஸ் பார்ப்பவரா நீங்க?

‘இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்’ என்ற யோசனையில் ரீல்ஸ் பாக்குறீங்களா? அது மிகவும் ஆபத்தானது என சீனாவின் தியான்ஜின் நார்மல் யுனிவர்சிட்டி எச்சரிக்கிறது. மது அருந்துவதை விட ரீல்ஸ் பார்ப்பது 5 மடங்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பது மூளையின் செயல்திறனையும் நேரடியாக பாதிக்கும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே!
News February 18, 2026
20 தொகுதிகள் கேட்கிறதா CPM? திமுகவுக்கு நெருக்கடி

திமுக கூட்டணியில் 20 சீட்டுகள் கேட்டு CPM டிமாண்ட் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பெரம்பூர், மதுரவாயல், தி.குன்றம், நாகை உள்ளிட்ட தொகுதிகளின் பெயரையும் திமுக தலைமையிடம் கொடுத்துள்ளதாம். ஏற்கெனவே, கூடுதல் தொகுதிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் CPM போட்டியிட்ட நிலையில், 2 இடங்களில் வெற்றி பெற்றது.


