News March 7, 2026

விலை உயராது.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹114.50-ம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹60-ம் உயர்ந்தது. சிலிண்டர் உயர்வால், டீ, காபி விலைகள் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டீ, காபிகளின் விலை உயராது என்று பெருநகர டீக்​கடை உரிமை​யாளர்​கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Similar News

News April 5, 2026

சென்னை: காதலனை கடத்தி தர்மடி கொடுத்த காதலி!

image

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (19). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து படித்து வருகிறார். தாம்பரத்தை சேர்ந்த மாணவியை காதலித்து வந்த நிலையில், மாணவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மாணவர், தான் செலவு செய்த பணத்தை அவரிடம் திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த மாணவி, நண்பர்களுடன் சேர்ந்து அவரை கடத்தி தாக்கியுள்ளார். புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 5, 2026

திருச்செந்தூர் அருகே சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து.!

image

திருச்செந்தூர் அருகே உள்ள கீழ நாலுமூலைகிணறு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செல்வம் – சந்திமுத்து தம்பதி. கூலி தொழிலாளியான இவர்கள் ஷீட் அமைத்து வீடு கட்டி அதில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீட்டிலிருந்த 7 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கருகியது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 5, 2026

BREAKING: திமுகவில் இருந்து MLA விலகுகிறார்

image

ஒட்டப்பிடாரம் திமுக MLA சண்முகையா தவெகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான ராமஜெயம் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால், ஸ்டாலின் நிகழ்ச்சியை நேற்று புறக்கணித்த சண்முகையா வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதிருப்தியால் திமுகவிலிருந்து <<19563851>>அடுத்தடுத்து பலர்<<>> விலகி வருகின்றனர்.

error: Content is protected !!