News January 28, 2026
விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியம்

விலங்குகள் கடித்தால் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கீரிப்பிள்ளை கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் 3 மாதம் கழித்து உயிரிழந்ததை அடுத்து, சுகாதாரத்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். பூனை, கீரிப்பிள்ளை போன்ற விலங்குகள் கடித்தால் ரேபிஸ் பரவும் என்பதால், உடனடியாக தடுப்பூசி செலுத்துவது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News February 7, 2026
விஜய்யால் அனைத்து கட்சிகளுக்கும் ஆபத்து: வாசன்

விஜய்யின் வாக்கு சதவீதத்தை 10-க்கும் குறைவாக இருக்குமென்று யாரும் கூறியதாக தெரியவில்லை; எனினும் அதனை உறுதிப்படுத்துபவர்கள் வாக்காளர்களே என ஜி.கேவாசன் பேசியுள்ளார். மதுரையில் பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகையால் அனைத்து கட்சிக்கும் ஆபத்து என்றார். அவர் எத்தனை சதவீத வாக்குகளை பெற்றாலும் அதில் தமாகா உள்பட அனைத்து கட்சியின் வாக்கு சதவீதமும் அடங்கும் எனவும் கூறியுள்ளார்.
News February 7, 2026
கமலுடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்ட ராதிகா!

ராதிகா நடித்துள்ள ’தாய் கிழவி’ திரைப்படம் வரும் பிப்.20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ராதிகா அளித்த பேட்டி ஒன்றில், ஹீரோக்களுக்கு எல்லாம் இவ்வளவு சம்பளம் கொடுக்குறீங்க, எனக்கும் அப்படி கொடுங்கய்யா என தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் ஜாலியாக கேட்டதாக கூறியுள்ளார். மேலும் கமல்ஹாசனைப் போலவே சிவகார்த்திகேயனும் சினிமாவில் முதலீடு செய்து தனித்துவமான படங்களை தயாரிக்கிறார் எனவும் பாராட்டியுள்ளார்.
News February 7, 2026
EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

தேர்தல் நெருங்குவதால், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்க பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், திமுக, சிபிஎம், தவாக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சேலத்தில் EPS-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களை கட்சி துண்டு போர்த்தி EPS வரவேற்றார். திமுக, அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் அதிமுகவில் இணைந்திருப்பது ஸ்டாலின் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


