News June 9, 2024
விலங்குகள் ஆம்புலன்ஸில் பணிபுரிய பணி ஆணை வழங்கல்

தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு விலங்குகள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்காக தேர்வு மாவட்ட மேலாளர் தலைமையில் நேற்று (ஜுன்.8) நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் ஓட்டுனர் பணிக்கு 30 பேரும், உதவியாளர் பணிக்கு 65 பேரும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
Similar News
News August 24, 2025
மருவுக்கு தடவும் மருந்து குடித்த குழந்தை பலி

மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் ராமு. கடந்த 21 ஆம்தேதி ராமுவின், மூன்றரை வயது மகள் கனிஷ்கா, வீட்டில் சிறிய பாட்டிலில் இருந்த, தோல் மருக்களுக்கு – தடவப்படும் மருந்தை தவறுதலாக குடித்துள்ளார். அதனால், கனிஷ்கா மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
News August 24, 2025
தர்மபுரி: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

தர்மபுரி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
தர்மபுரி: மாணவிக்கு பாலியல் தொல்லை; முதல்வர் கைது

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து வரும் வினுலோகேஸ்வரன், அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவி பெற்றோரிடம் கூற, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வினுலோகேஸ்வரனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.