News September 3, 2025
விரைவில் 69 ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் படிக்கத் தெரியாத 1.10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இவர்களில் முதற்கட்டமாக 70,000 பேருக்கு, 1,921 தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை அனைவருக்கும் கல்வி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என கல்வியாளர்கள் கருத்து!
Similar News
News September 3, 2025
சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News September 3, 2025
சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டி

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சென்னை சென்ட்ரல்-ஆழப்புலா தினசரி எக்ஸ்பிரஸ்(22639), ஆழப்புலா- சென்னை சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ்(22640), சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் தினசரி எக்ஸ்பிரஸ்(12695), திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ்(12696),கோவை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்(16618/16617) ஆகிய ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள்!
News September 3, 2025
மிலாது நபி: சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள்!

மிலாது நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (செப்.04) முதல் செப்.08- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், செப்.07- ல் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு செப்.07, 08- ல் சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.