News November 5, 2024
விரைவில் வரும் ஆம்னி பேருந்து நிலையம்

தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் ரூ.42 கோடி செலவில் புதிதாக ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அது, இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார். இங்கு 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் பல்வேறு நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன என்றும், இது திறக்கப்பட்டபின் கிளாம்பாக்கத்தில் சற்று நெரிசல் குறையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டுக்கு இன்று லீவு இல்லை

கடந்த ஜூலை 28ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிபூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 9ம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில்,அரசு துவக்கபள்ளிகளில், 1ம்வகுப்பில் கடந்தாண்டு 7,227மாணவர்கள் சேர்ந்தநிலையில், இந்தாண்டு 6,073 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். துவக்கபள்ளிகள்481, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகள் 83, நடுநிலைபள்ளிகள் 189, அரசு உதவி பெறும்நடுநிலை பள்ளிகள் 27 என் மொத்தம் 782 பள்ளிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
News August 9, 2025
செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், திருப்போரூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <