News December 11, 2025

விரைவில் மோடி – இஸ்ரேல் PM சந்திப்பு

image

PM மோடியை, இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, பயங்கரவாதத்தை இருவரும் வன்மையாக கண்டித்து உரையாடினர். காசா அமைதி திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கும், உலகில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என மோடி உறுதியளித்தார். இந்நிலையில், இருநாட்டு தலைவர்களும் விரைவில் சந்திப்பார்கள் என இஸ்ரேல் PM அலுவலகம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 29, 2026

தி.மலை: தூசி மோகன் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

image

செய்யாறு தொகுதி தவெக வேட்பாளராக தூசி மோகனை, தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்தார். இந்நிலையில் திருவண்ணாமலை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த தூசி மோகனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிமுகவில் எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில் கிடைக்காததால் தவெக இணைந்ததால் நீக்கப்பட்டுள்ளார்.

News March 29, 2026

இலங்கைக்கு எரிபொருள் உதவி செய்த இந்தியா

image

மேற்காசிய போரால் இலங்கையில் கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து சில நாள்கள் முன்பு PM மோடியிடம் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க பேசியிருந்தார். இதன் பலனாக 38,000 மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் உதவிக்கு PM மோடி, EAM ஜெய்சங்கருக்கு இலங்கை அதிபர் நன்றி கூறியுள்ளார்.

News March 29, 2026

திமுக, அதிமுகவை நேரடியாக எதிர்த்து போட்டியிடும் விஜய்

image

2011-ல் உருவாக்கப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2021, 2016-ல் அதிமுகவும், 2021-ல் திமுகவும் வெற்றிபெற்றன. தற்போது சிட்டிங் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், அதிமுகவின் ராஜசேகரன் களத்தில் உள்ளனர். சிறுபான்மை மக்கள் அதிகமுள்ள இத்தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை விஜய் நேரடியாக எதிர்த்து களமிறங்குகிறார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!